







பாஸ்டர் டாமியனின் தினசரி அலுவல் அட்டவணையில், வெவ்வேறு வாழ்க்கைப் பாதைகளைத் தெரிந்தெடுத்து மரணத்தை நெருங்கும் இரண்டு நபர்களை சந்திக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்த்து. ஓர் மருத்துவமனையில் தன் குடும்பத்தாரால் விரும்பப்படும் ஓர் பெண் இருந்தாள். அவளது தன்னலமற்ற பொதுச்சேவை பலரின் அபிமானத்தை பெற்றதால் மற்ற விசுவாசிகள் அவளது அறையை நிரப்பி, ஆராதனை, பாடல், ஜெபம் என்று செய்தனர். மற்றொரு மருத்துவமனையில், பாஸ்டர் டாமியனின் தேவாலயத்தைச் சேர்ந்த இன்னொரு உறுப்பினரின் உறவினரும் இறக்கும் தருவாயில் இருந்தார். அவரது கடினமான இதயம் கடினமான வாழ்க்கைக்கு வழிவகுத்தது. மேலும் அவரது மோசமான முடிவுகள் மற்றும் தவறான செயல்களின் பின்னணியில் அவரது குடும்பம் வாழ்ந்து வந்தது. இந்த இரண்டு வெவ்வேறான சூழ்நிலைகள், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பதைப் பிரதிபலித்தது.
வாழ்க்கையில் தாங்கள் எங்கு செல்கிறோம் என்பதைக் கருத்தில்கொள்ளத் தவறியவர்கள் பெரும்பாலும் சங்கடமான, விரும்பத்தகாத, தனிமையான இடங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். நீதிமொழிகள் 14:12, “மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என்று கூறுகிறது. இளைஞர்கள் அல்லது வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது நலமுடையவர்கள், செல்வந்தர்கள் அல்லது வறியவர்கள் என யாராக இருந்தாலும், தங்களுடைய வாழ்க்கைப் பாதையை சரிசெய்வதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. அது நம்மை எங்கே கொண்டு செல்லும்? அது தேவனை கனப்படுத்துமா? அது மற்றவர்களுக்கு உதவக்கூடியதா அல்லது பாதிக்கக்கூடியதா? இயேசுவை விசுவாசிப்பவருக்கு இது சிறந்த பாதையா?
தேர்ந்தெடுப்புகள் மிகவும் முக்கியம். பரலோகத்தின் தேவன் அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக, “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28)என்று வாக்குப்பண்ணுகிறார்.
“ஹிட்டன் பிகர்ஸ்” என்ற புத்தகம் ஜான் க்ளென் விண்வெளிக்குச் செல்வதற்காக ஏறெடுத்த முன் ஆயத்தங்களை விவரிக்கிறது. 1962இல் உருவாக்கப்பட்ட கணினி கண்டுபிடிப்புகள் குறைபாடுகளுக்கு உட்பட்டது. ஆகவே க்ளென் அவைகளை நம்பாமல் விண்கலம் புறப்படுதற்கான எண் எண்ணிக்கையை யார் கூறுவது என்பதைக் குறித்து அவர் கவலைகொண்டார். பின் அறையில் இருக்கக்கூடிய ஓர் புத்திசாலி பெண்ணினால் எண்களை நேர்த்தியாய் இயக்க முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் அப்பெண்ணை நம்பினார். “அவள் எண்ணிக்கையை சொல்ல ஆயத்தமாயிருந்தால், நான் போவதற்கு தயாராக இருக்கிறேன்” என்று கிளென் கூறுகிறார்.
கேத்தரின் ஜான்சன், ஓர் ஆசிரியர் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு தாய். அவள் இயேசுவை நேசித்தாள், அவளுடைய தேவாலயத்தில் ஊழியம் செய்தாள். தேவன் கேத்தரீனை வெகுவாய் ஆசீர்வதித்திருந்தார். 1950க்கு பிறகு, விண்வெளி திட்டத்திற்கு உதவுவதற்காக நாசா அவளை அழைத்தது. அவள் சிறப்பாய் தன் மூளையைப் பிரயோகிக்கக்கூடிய மனித கணினியாய் செயல்பட்டாள். நாம் புத்திசாலித்தனமான கணிதவியலாளர்களாக அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை மற்ற விஷயங்களுக்கு அழைக்கிறார்: “கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது” (எபேசியர் 4:7). நாம் பெற்ற அழைப்புக்கு தகுதியான வாழ்க்கையை வாழவேண்டும் (வச. 1). ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில், நாம் ஒரே சரீரத்தின் அவயங்களாய் செயல்பட அழைக்கப்பட்டிருக்கிறோம் (வச. 16).
கேத்தரின் ஜான்சனின் கணக்கீடுகள் விண்வெளிப்பாதையை உறுதிப்படுத்தின. விண்கலத்தை சுற்றுப்பாதையில் செலுத்துவது என்பது தோராயமாய் பயணிக்கும் கிளென்னின் முயற்சியாகும். ஆனால் இது கேத்தரினின் அழைப்புகளில் ஒன்றாகும். அவள் ஓர் தாயாகவும், ஆசிரியராகவும், தேவாலய ஊழியராகவும் அழைக்கப்பட்டவள். பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, தேவன் நம்மை எந்த நோக்கத்திற்காய் அழைத்திருக்கிறார் என்பதை நாம் தெரிந்துகொள்ளுதல் அவசியம். அவர் நமக்கு அருளியிருக்கிற கிருபையின் வரங்களைப் பயன்படுத்தி நம்முடைய அழைப்புக்கு ஏற்ற ஜீவியம் ஜீவிப்பதற்கு நாம் ஆயத்தமாயிருக்கிறோமா?
2023ல் பெங்களூருவில் சில காலம் கழிக்கும் திட்டத்துடன் வந்தேன். ஆனால் அந்த காலம் நான் எதிர்பாராமல் நீண்டது. எனக்கு இரவு உணவு கொண்டு வரும் குடும்பத்தினர் எனக்கு உதவ முடியாத நிலையில், நான் வெளியே சாப்பிட ஆரம்பித்தேன். இது என் உடல்நிலையைப் பாதித்தது. அதிர்ஷ்டவசமாக நான் குறுகிய காலமே பழகிய ஒரு குடும்பம், எனக்கு உணவளித்து உதவ விரும்புவதாகச் சொன்னார்கள். அவர்கள் "பிறருக்கு உதவி சேவை செய்திடத் தேவன் எங்களுக்கு பெலனளித்துள்ளார், நாங்கள் உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாய் இருக்க வேண்டும்" என்றனர். தேவனின் வார்த்தை பல்வேறு சூழல்களில் உக்கிராணத்துவத்தை பற்றிப் பேசுகிறது மற்றும் நாம் "உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக" (லூக்கா 12:42-48) இருக்க வேண்டும் என்கிறது. தேவன் நமக்குப் பல வரங்களைத் தந்திருக்கிறார், அவற்றை நாம் உண்மையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார் (1 பேதுரு 4:10). இந்த ஈவுகளைப் பயன்படுத்தி ஆர்வத்துடன் பிறருக்கு ஊழியம் செய்யவும், அன்புடன் விருந்தோம்பல் செய்யவும் நாம் வலியுறுத்தப்படுகிறோம் (வ.8-10). நம்மிடம் இருப்பது நமக்காக மட்டுமல்ல, பிறரின் நலனுக்காகவும் இருக்கிறது என்பதை ஒரு உண்மையுள்ள உக்கிராணக்காரன் உணர்ந்துகொள்கிறான். பெங்களூருவில் உள்ள குடும்பம் அதையே எனக்காகச் செய்தது. அவர்கள் தங்கள் பலத்தை உணர்ந்து அதற்கேற்ப உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாகச் செயல்பட்டார்கள்.
நம்மிடம் எத்தகைய திறன் இருந்தாலும் அது தேவனிடமிருந்தே வந்தது என்பதை நினைவில் கொள்வோம் (வ.10). நாம் பிறருக்கு உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வரங்களையும் உடைமைகளையும் அவர் நம்மிடம் நம்பி ஒப்படைத்துள்ளார். எனவே, நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை அறிந்து ஒருவருக்கொருவர் மனமுவந்து உதவி செய்வோம். நமக்குக் கொடுக்கப்பட்ட வரங்களும், தனித்தன்மை வாய்ந்த மனிதர்களாக நாம் உருவாக்கப்பட்ட விதமும் நமக்கு மட்டுமல்ல, தேவைப்படுகிற அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதை நினைவில் கொள்வோம். தேவன் கொடுத்த கிருபைகள் மற்றும் ஈவுகளுக்கு ஏற்ப நாம் பிறருக்கு நன்மை செய்யும்போது, நாம் அவர்களின் உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக மாறுகிறோம்.